நமக்கு நிறைய பொழுதுப்போக்கு விஷயங்கள் இந்த உலகத்துல இருக்கு.அதுல பார்த்து ரசிச்ச,தெரிஞ்சிக்கிட்டே
விஷயங்கள யார்கிட்டயாவது பகிர்ந்துகளைன்னா,நம்ம மனசுக்கு ஆறுதல் கிடைக்காது.நாம சொல்லிக்கேட்கிறவங்களுக்கு
,சொல்லுற விஷயம் அவங்களுக்கு கொஞ்சமாவது தெரிஞ்சி இருக்கனும் இல்லைன்னா நமக்கும் கஷ்டம்
,அவங்களுக்கும் சங்கடம்.
கடந்த ஒரு வருஷமா புதுசா ஒரு பொழுதுப்போக்கு விஷயம் என் பொழுதுப்போக்கு வரிசையில சேர்ந்து இருக்கு
“கொரியன் டிராமா,” (நன்றி: தோழி சௌமியா மற்றும் என் கல்லூரி (ஹி…ஹி… ) .)
தோழிங்ககிட்ட இந்த கதை நல்லா இருக்கு,அந்த கதை அருமையா இருக்குன்னு சொல்ல முடியுதே
தவிர,சேர்ந்து பார்க்க முடியறது இல்லை.அவங்களுக்கும் நேரம் இல்லை.நான் எப்பவுமே வெட்டித்தான்
அதனால தான் 30க்கும் மேல டிராமாஸ் (சில படங்கலும்)பார்த்துட்டேன்.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி கொரியன் டிராமாங்க பற்றி எதுவும் தெரியாது,எனக்கு தெரிஞ்சதுன்னு
பார்த்தா ஒரு விஷயம் தான் ‘தமிழ் படங்க கொரியன் படங்கள்ல இருந்து காட்சிகளை காப்பியடிக்கிது’.அப்படி
என்ன தான் இருக்குன்னு புதுயுகம் டி.வி.ல பார்க்க ஆரம்பிச்சி ,இப்ப அடுத்து என்ன டிராமாங்க
ரிலீஸ் பன்னப்போறாங்கன்னுக்கூடத் தெரியும்.அப்படி அதுக்கு அடிமையாகி இருக்கேன்.அதுக்கு
காரணம் இருக்கு
1] முதல்ல நடிகருங்க நடிக்கறாங்க.சொந்தக்குரல்ல தான் பேசறாங்க.(சில பேர் பாடவும்
செய்யறாங்க)
2]நம்ம ஊரு மெகாத்தொடர் மாறி இல்லாம,10ல் இருந்து 30 வரை தான் எபிசோட்ஸ் இருக்கும்.
3]திரைப்படத்துக்கும்,நாடகத்துக்கும் வித்தியாசம் இருக்கறது இல்லை.(நடிகர்,நடிகைகள்,திரைக்கதை,பாட்டு,பட்ஜெட்)
4]கொரியன் கலாச்சாரத்துல நம்ம நாடுமாறி குடும்ப உறவு முறைகளுக்கு முக்கியத்துவம்
இருக்கு,கதைகள்ல அந்த விஷயம் பிரதிபலிக்கிறது.(முழுமையா இல்லைனாலும்,கொஞ்சமா)
எங்க அம்மா முதல்ல பார்க்கும்போது அவங்க சொன்ன முதல் வசனம் ,“என்னடி பொண்ணுக்கும்
பையனுக்கும் வித்தியாசமே தெரியல”.எனக்கு அந்த பிரச்சனை இல்லை,வித்தியாசம் நல்லாவே தெரிஞ்சது(நாம
தான் கே டி.வி ல போட்ட ‘மின்னல் அடி’ மாறி படம் பார்த்திருக்கேனே)
நடிப்புத் தவிர கொரியன் நாடகத்தை ஏன் பார்க்கலாம்.ம்...ம்..
1]நடிகை மற்றும் நடிகருகளுக்கு சிரிப்பு,குரல்.
2]அவங்க போடற உடைங்க (நம்ம ஊரு வெயிலுக்கு அதை போட்டா
செத்துடுவோம்.அதனால பார்த்து ரசிக்க மட்டும் தான் முடியும்)
‘ரீமேக்’ வேற ,காப்பியடிக்கறது வேற . நான் கொரியன்
நாடகங்க,படங்க பார்த்த அப்பறம் நிறைய கொரியன் படம் காட்சி(படம்)ங்க தமிழ்(தெலுங்கு)
படங்களில பார்த்திருக்கேன்னு ஞாபகம் வந்துச்சி.(அதுவும் ஹிட் படங்க)
நான் பார்த்து ரசிச்ச கொரியன் நாடகங்கள், படங்கள், பாட்டுங்க நடிகர் நடிகைகள் பற்றி
இங்கே எழுதுகிறேன்.
