சனி, 23 செப்டம்பர், 2017

ஹலோ கோஸ்ட் (கொரிய திரைப்படம்)

ஹலோ கோஸ்ட்(HELLO GHOST)


       இது ஒரு கொரியன் படம்.கொரியன் படம் தான் எனக்கு கொரியன் ட்ராமா, வரைட்டி ஷோக்களை பார்க்க தூண்டுதலா இருந்தது, காரணம் இந்திய திரைப்படங்களிலே வரும் பல காட்சிகள் அங்க இருந்து தான் சுட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அது 65% உண்மை. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. நம்ம தமிழ்ப்படங்கள் கூட விதிவிலக்கில்லை. அஃபிஸியல் ரீமேக் குறைவு தான் எடுத்துக்காட்டு ‘காதலும் கடந்துப்போகும்’,இந்தியிலே சில படங்கள்.இந்த படத்தோட ஹீரோ சா தே யான் (CHA TAE HYUN) எனக்கு தனிநபர் வாழ்க்கையிலே ரொம்ப பிடிக்கும்.காரணம் நல்ல கணவன்,மகன்,அப்பா,நண்பன் இன்னும் பல இருக்கு.ஆனா அவரோட படம்ன்னு முதல்லே பார்த்தது ‘மை சாஷி கேர்ள்’ (இந்த படத்திலே வர ஒரு காட்சி ‘சிவா மனசுல சக்தி’லையும், இன்னோரு சின்னக்காட்சி ‘சிந்தனை செய்’ படத்திலையும் பார்த்தேன்). இந்த படம் என் மனசுலே நிக்கலே,அது ரொமண்டிக் காமெடி ஆனா நல்லா இருந்தது. ஒரு தடவை பார்க்கலாம்.அடுத்து அவருடைய டிராமா ‘ப்ரொடியுசர்’ காமேடி,வரைட்டி, ரொமண்டிக் டிராமா.எனக்கு பிடிச்ச இன்னொரு நடிகரும் நடிச்சிருந்தார். அடுத்து ரன்னிங் மேன் வரைட்டி ஷோலே கெஸ்டா வந்தப்போ (கிம் ஜங் கூக்கின் நண்பரும் கூட) எனக்கு ரொம்ப பிடிச்சது, அந்த எபிசோடே கலகலப்பா இருந்தது.இன்னும் 2 எபிசோட்லையும் வந்தார். அவர் நடிச்சி பார்த்த படம் ‘ஸ்கேன்டல் மேக்கர்ஸ்’, இந்த படத்தை பத்தி தனியா தான் எழுதனும்.தேயான் ‘2days 1night’ வரைட்டி ஷோலே ஒரு நபரா இருக்காரு,அந்த ஷோவை பார்த்தப்போ அவர் ஒரு பேய் படத்திலே நடிச்சிருக்காருன்னு தெரிஞ்சது ஓ...! வித்தியாசமா இருக்கும் போலன்னு உடனே கதைக்கரு படிச்சேன், பிடிச்சிப்போய் பார்த்தேன்.அந்த கதையை யார்கிடயும் சொல்ல முடியலே, யார் கூடவும் சேர்ந்து பார்க்க முடியிலே அதனாலே நான் இதிலே எழுதறேன். KIM YOUNG TAK வோட (டைரக்டர்+கதை+திரைக்கதையாசிரியர்) திரைக்கதை ரொம்ப அருமையா இருந்தது ஆனால் சிறந்தது இல்லை. இந்த படத்தை பார்த்த பிறகு சில ஒற்றுமைகள் ஒரு தமிழ் படத்திலே தெரிஞ்சது அது ‘சூர்யா’ இல்லை இல்லை வெங்கட் பிரபு வோட ‘மாஸ்’ படம் தான்.தமிழ்லே சொதப்பி இருந்தாங்க.நல்ல நடிகர்களை வேஸ்ட் செஞ்சாச்சி,நேரத்தை வீண் செஞ்சாச்சி மொத்ததிலே காசு போச்சி.

வியாழன், 21 ஜூலை, 2016

ரிப்லை(Reply) 1988

ரிப்லை(Reply) 1988


         என்னை பொருத்தவரை ஒரு தொலைக்காட்சி தொடரோ,இல்லை படமோ 75% பாஸிடிவ்வான விஷ்யங்கள் இருந்த அது பார்த்து ரசிக்க 100% சிறந்தது.அப்படிபட்ட கதைதான் ரிப்லை 1988. இது இத்தொடரோட 3வது பாகம்(முதல் 2 பாகத்தை பார்த்ததில்லை ஆனா படிச்சிருக்கிறேன்). ரிப்லை 1988 20 பகுதிங்க இருக்கற கதை. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தடவையாவது கண்ணுல தண்ணி வந்துடும்...ஆனந்த கண்ணீர்பா. நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப தனிமையாய் இருந்து பழக்கப்பட்டவ அதனால உறவுகள் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க கொஞ்சம் கஷ்டப்படுவேன் .என் வாழ்க்கைல உண்மையா இந்த கதைய பார்த்து சில விஷயத்த திருத்திக்கிட்டேன் முக்கியமா பெத்தவங்கள பத்தி. ஒவ்வொரு பகுதியும் 1.30 மணிநேரம் போகும். அதுல இருக்கற காதல் கதைய தவிர்த்து மத்த சீனுங்க எல்லாம் நம்ம ஊரு பெத்தவங்களுக்கும் ,பிள்ளைகளுக்கும் பாடம். நடிப்பு,இசை(1980களின் கொரியா பாடல்கள்) சூப்பர்.இந்த கதை மாறி நம்ம ஊருல சீரியல் எடுத்தா பிச்சிட்டு ஓடும், ஆனா நம்ம ஆளுங்களுக்கு மாமியார்-மருமக சண்டை,பில்லி சூன்யம்,பெரிய தேவையில்லாத வசனங்க,முடிவில்லா சோகம்,அழுகை,சண்டை....அப்பப்பா.நம்ம ஊரு நடிகருங்க சலைச்சவங்க இல்லை நல்லாவே நடிக்கிறாங்க ஆனா சரியான பாதை கிடைக்கிலைன்னு தான் சொல்லனும்.என்னை பொருத்தவரை மெகாதொடர்ல முக்கியாம தமிழ்ல ‘கொஞ்சமா செலவு பன்னி ஆதிகமா சம்பாதிக்கிறாங்க’.திரும்பி இந்த கதைக்கு வரலாம்.நான் ஒரு முடிவு செஞ்சியிருக்கிறேன்.எனக்கு கதை எழுதனும்னு ஆசை, ஆனா சரியா எழுதற அளவுக்கு அனுபவம் பத்தல.அதனால பேசாம எனக்கு பிடிச்ச இந்த கதையை மொழிபெயர்ப்பு மாதிரி எழுதலாம்னு இருக்கேன்.

இந்த blogல ஒருத்தரும் என்னை தொடரலன்ற நம்பிக்கைல இந்த முயற்சி.

ஹிலர்(Healer)

ஹிலர்(Healer)

முதல் எபிசோட் பார்த்தப்போ சட்டுன்னு என்ன நடக்குதுன்னு தெரியாம தான் பார்த்தேன் ஆனா அடுத்தடுத்த எபிசோடுங்க எனக்கு நல்ல ஒரு செமி- ஆக்ஷ்ன்,காமெடி,காதல் கதைய எனக்கு அறிமுகப்படுத்திச்சி.உண்மைய சொல்லனும்ன எனக்கு அந்த கதையில வர ரொமண்டிக் சீன்ஸ் ரொம்ப பிடிச்சது (வாவ்... கியூட் சீன்ஸ்). ji chang wook-park min young ஜோடி உண்மையாவே டேட் பன்னா நல்லா இருக்கும்ன்ற அளவுக்கு அவங்க chemistry செமயா இருக்கும்.அந்த கதைல வற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்க எல்லாமே தனித்தன்மையா இருக்கும், (அஜும்மா,ஹீரோ டீச்சர்,கிம் மூன் ஓ,அண்ணி,கதாநாயகியோட அப்பா,அங்கிள்,அஜும்மாவோட ஜுனியர்,) நல்லவும் நடிச்சி இருப்பாங்க. என் தங்க்ச்சி உருப்படியா முழுசா பார்த்த கதை இது (அவளுக்கு இங்கிலிஷ் சப்டைட்டில் படிக்கனும்னா.....).இந்த கதாபாத்திரங்க மறக்க முடியாத ஒண்ணா இப்பவும் மனசுலையே இருக்கு.
கதை இதுதான்-ஹீரோ ஹீலர் (ji chang wook) இரவுல மட்டும் courier வேலை செய்யறவன் ( ரகசியமா client சொல்லுற வேலைய செய்யறது).அவனுக்கு பார்ட்னர் hacking expert அஜும்மா.ஒரு நாள் டிவி ரிப்போர்டர் கிம் மூன் ஓ(ji tae) ஒரு பொண்ணோட dna sample ஐ எடுத்துவர சொல்லுறான், அது பொண்ணுதான் ஹீரோயின் (park min young). அடுத்த வேலைய மூன் ஓ ஹீலர்க்கிட்ட அடுத்த வேலை கொடுக்கறான்,”ஹீரோயின பாதுகாக்கனும்”.ஒரு கட்டத்துல வில்லன் மூன் ஓவின் அண்ணனால் ஹீரோ மேல கொலைப்பழிவிழ.காரணம் மூன் ஓவின் அண்ணன் தான், மூன் ஓ  அந்த பொண்ணை கண்டுபிடிக்கற வேலைய ஏன் இவங்கிட்ட கொடுத்தான்னு கண்டுபிடிக்க ஹீரோயின் வேலை செய்யிற எடத்துல ஜுனியரா சேர்றான்.உயிர காப்பத்தின ஹீலர் மேல ஹீரோயினின் காதல். ஹீரோயினின் உண்மையான அப்பாவை ஹீரோவின் தந்தைதான் கொன்றார் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த எபிசோட்ல பதில்கள் விறுவிறுப்பாக கொடுத்திருப்பார்கள்.பின்னனி இசையும்,பாட்டுகளும்  சூப்பரா இருக்கும்.செமையா இருக்கும் தாராளமா பார்க்கலாம்.

       

திங்கள், 23 நவம்பர், 2015

ஒரு சின்ன முன்னுரை

            நமக்கு நிறைய பொழுதுப்போக்கு விஷயங்கள் இந்த உலகத்துல இருக்கு.அதுல பார்த்து ரசிச்ச,தெரிஞ்சிக்கிட்டே விஷயங்கள யார்கிட்டயாவது பகிர்ந்துகளைன்னா,நம்ம மனசுக்கு ஆறுதல் கிடைக்காது.நாம சொல்லிக்கேட்கிறவங்களுக்கு ,சொல்லுற விஷயம் அவங்களுக்கு கொஞ்சமாவது தெரிஞ்சி இருக்கனும் இல்லைன்னா நமக்கும் கஷ்டம் ,அவங்களுக்கும் சங்கடம்.
கடந்த ஒரு வருஷமா புதுசா ஒரு பொழுதுப்போக்கு விஷயம் என் பொழுதுப்போக்கு வரிசையில சேர்ந்து இருக்கு “கொரியன் டிராமா,” (நன்றி: தோழி சௌமியா மற்றும் என் கல்லூரி (ஹி…ஹி… ) .)
தோழிங்ககிட்ட இந்த கதை நல்லா இருக்கு,அந்த கதை அருமையா இருக்குன்னு சொல்ல முடியுதே தவிர,சேர்ந்து பார்க்க முடியறது இல்லை.அவங்களுக்கும் நேரம் இல்லை.நான் எப்பவுமே வெட்டித்தான் அதனால தான் 30க்கும் மேல டிராமாஸ் (சில படங்கலும்)பார்த்துட்டேன்.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி கொரியன் டிராமாங்க பற்றி எதுவும் தெரியாது,எனக்கு தெரிஞ்சதுன்னு பார்த்தா ஒரு விஷயம் தான் ‘தமிழ் படங்க கொரியன் படங்கள்ல இருந்து காட்சிகளை காப்பியடிக்கிது’.அப்படி என்ன தான் இருக்குன்னு புதுயுகம் டி.வி.ல பார்க்க ஆரம்பிச்சி ,இப்ப அடுத்து என்ன டிராமாங்க ரிலீஸ் பன்னப்போறாங்கன்னுக்கூடத் தெரியும்.அப்படி அதுக்கு அடிமையாகி இருக்கேன்.அதுக்கு காரணம் இருக்கு
1] முதல்ல நடிகருங்க நடிக்கறாங்க.சொந்தக்குரல்ல தான் பேசறாங்க.(சில பேர் பாடவும் செய்யறாங்க)
2]நம்ம ஊரு மெகாத்தொடர் மாறி இல்லாம,10ல் இருந்து 30 வரை தான் எபிசோட்ஸ் இருக்கும்.
3]திரைப்படத்துக்கும்,நாடகத்துக்கும் வித்தியாசம் இருக்கறது இல்லை.(நடிகர்,நடிகைகள்,திரைக்கதை,பாட்டு,பட்ஜெட்)
4]கொரியன் கலாச்சாரத்துல நம்ம நாடுமாறி குடும்ப உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் இருக்கு,கதைகள்ல அந்த விஷயம் பிரதிபலிக்கிறது.(முழுமையா இல்லைனாலும்,கொஞ்சமா)
எங்க அம்மா முதல்ல பார்க்கும்போது அவங்க சொன்ன முதல் வசனம் ,“என்னடி பொண்ணுக்கும் பையனுக்கும் வித்தியாசமே தெரியல”.எனக்கு அந்த பிரச்சனை இல்லை,வித்தியாசம் நல்லாவே தெரிஞ்சது(நாம தான் கே டி.வி ல போட்ட ‘மின்னல் அடி’ மாறி படம் பார்த்திருக்கேனே)
நடிப்புத் தவிர கொரியன் நாடகத்தை ஏன் பார்க்கலாம்.ம்...ம்..
1]நடிகை மற்றும் நடிகருகளுக்கு சிரிப்பு,குரல்.
2]அவங்க போடற உடைங்க (நம்ம ஊரு வெயிலுக்கு அதை போட்டா செத்துடுவோம்.அதனால பார்த்து ரசிக்க மட்டும் தான் முடியும்)
‘ரீமேக்’ வேற ,காப்பியடிக்கறது வேற . நான் கொரியன் நாடகங்க,படங்க பார்த்த அப்பறம் நிறைய கொரியன் படம் காட்சி(படம்)ங்க தமிழ்(தெலுங்கு) படங்களில பார்த்திருக்கேன்னு ஞாபகம் வந்துச்சி.(அதுவும் ஹிட் படங்க)
நான் பார்த்து ரசிச்ச கொரியன் நாடகங்கள், படங்கள், பாட்டுங்க நடிகர் நடிகைகள் பற்றி இங்கே எழுதுகிறேன்.