ரிப்லை(Reply) 1988
என்னை பொருத்தவரை ஒரு தொலைக்காட்சி தொடரோ,இல்லை படமோ 75% பாஸிடிவ்வான
விஷ்யங்கள் இருந்த அது பார்த்து ரசிக்க 100% சிறந்தது.அப்படிபட்ட கதைதான் ரிப்லை
1988. இது இத்தொடரோட 3வது பாகம்(முதல் 2 பாகத்தை பார்த்ததில்லை ஆனா
படிச்சிருக்கிறேன்). ரிப்லை 1988 20 பகுதிங்க இருக்கற கதை. ஒவ்வொரு பகுதியிலும்
ஒரு தடவையாவது கண்ணுல தண்ணி வந்துடும்...ஆனந்த கண்ணீர்பா. நான் சின்ன வயசுல
இருந்தே ரொம்ப தனிமையாய் இருந்து பழக்கப்பட்டவ அதனால உறவுகள் சம்பந்தப்பட்ட
முடிவுகளை எடுக்க கொஞ்சம் கஷ்டப்படுவேன் .என் வாழ்க்கைல உண்மையா இந்த கதைய
பார்த்து சில விஷயத்த திருத்திக்கிட்டேன் முக்கியமா பெத்தவங்கள பத்தி. ஒவ்வொரு
பகுதியும் 1.30 மணிநேரம் போகும். அதுல இருக்கற காதல் கதைய தவிர்த்து மத்த சீனுங்க
எல்லாம் நம்ம ஊரு பெத்தவங்களுக்கும் ,பிள்ளைகளுக்கும் பாடம். நடிப்பு,இசை(1980களின்
கொரியா பாடல்கள்) சூப்பர்.இந்த கதை மாறி நம்ம ஊருல சீரியல் எடுத்தா பிச்சிட்டு
ஓடும், ஆனா நம்ம ஆளுங்களுக்கு மாமியார்-மருமக சண்டை,பில்லி சூன்யம்,பெரிய
தேவையில்லாத வசனங்க,முடிவில்லா சோகம்,அழுகை,சண்டை....அப்பப்பா.நம்ம ஊரு நடிகருங்க
சலைச்சவங்க இல்லை நல்லாவே நடிக்கிறாங்க ஆனா சரியான பாதை கிடைக்கிலைன்னு தான்
சொல்லனும்.என்னை பொருத்தவரை மெகாதொடர்ல முக்கியாம தமிழ்ல ‘கொஞ்சமா செலவு பன்னி
ஆதிகமா சம்பாதிக்கிறாங்க’.திரும்பி இந்த கதைக்கு வரலாம்.நான் ஒரு முடிவு செஞ்சியிருக்கிறேன்.எனக்கு கதை
எழுதனும்னு ஆசை, ஆனா சரியா எழுதற அளவுக்கு அனுபவம் பத்தல.அதனால பேசாம எனக்கு
பிடிச்ச இந்த கதையை மொழிபெயர்ப்பு மாதிரி எழுதலாம்னு இருக்கேன்.
இந்த blogல ஒருத்தரும் என்னை தொடரலன்ற நம்பிக்கைல இந்த முயற்சி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக