சனி, 23 செப்டம்பர், 2017

ஹலோ கோஸ்ட் (கொரிய திரைப்படம்)

ஹலோ கோஸ்ட்(HELLO GHOST)


       இது ஒரு கொரியன் படம்.கொரியன் படம் தான் எனக்கு கொரியன் ட்ராமா, வரைட்டி ஷோக்களை பார்க்க தூண்டுதலா இருந்தது, காரணம் இந்திய திரைப்படங்களிலே வரும் பல காட்சிகள் அங்க இருந்து தான் சுட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அது 65% உண்மை. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. நம்ம தமிழ்ப்படங்கள் கூட விதிவிலக்கில்லை. அஃபிஸியல் ரீமேக் குறைவு தான் எடுத்துக்காட்டு ‘காதலும் கடந்துப்போகும்’,இந்தியிலே சில படங்கள்.இந்த படத்தோட ஹீரோ சா தே யான் (CHA TAE HYUN) எனக்கு தனிநபர் வாழ்க்கையிலே ரொம்ப பிடிக்கும்.காரணம் நல்ல கணவன்,மகன்,அப்பா,நண்பன் இன்னும் பல இருக்கு.ஆனா அவரோட படம்ன்னு முதல்லே பார்த்தது ‘மை சாஷி கேர்ள்’ (இந்த படத்திலே வர ஒரு காட்சி ‘சிவா மனசுல சக்தி’லையும், இன்னோரு சின்னக்காட்சி ‘சிந்தனை செய்’ படத்திலையும் பார்த்தேன்). இந்த படம் என் மனசுலே நிக்கலே,அது ரொமண்டிக் காமெடி ஆனா நல்லா இருந்தது. ஒரு தடவை பார்க்கலாம்.அடுத்து அவருடைய டிராமா ‘ப்ரொடியுசர்’ காமேடி,வரைட்டி, ரொமண்டிக் டிராமா.எனக்கு பிடிச்ச இன்னொரு நடிகரும் நடிச்சிருந்தார். அடுத்து ரன்னிங் மேன் வரைட்டி ஷோலே கெஸ்டா வந்தப்போ (கிம் ஜங் கூக்கின் நண்பரும் கூட) எனக்கு ரொம்ப பிடிச்சது, அந்த எபிசோடே கலகலப்பா இருந்தது.இன்னும் 2 எபிசோட்லையும் வந்தார். அவர் நடிச்சி பார்த்த படம் ‘ஸ்கேன்டல் மேக்கர்ஸ்’, இந்த படத்தை பத்தி தனியா தான் எழுதனும்.தேயான் ‘2days 1night’ வரைட்டி ஷோலே ஒரு நபரா இருக்காரு,அந்த ஷோவை பார்த்தப்போ அவர் ஒரு பேய் படத்திலே நடிச்சிருக்காருன்னு தெரிஞ்சது ஓ...! வித்தியாசமா இருக்கும் போலன்னு உடனே கதைக்கரு படிச்சேன், பிடிச்சிப்போய் பார்த்தேன்.அந்த கதையை யார்கிடயும் சொல்ல முடியலே, யார் கூடவும் சேர்ந்து பார்க்க முடியிலே அதனாலே நான் இதிலே எழுதறேன். KIM YOUNG TAK வோட (டைரக்டர்+கதை+திரைக்கதையாசிரியர்) திரைக்கதை ரொம்ப அருமையா இருந்தது ஆனால் சிறந்தது இல்லை. இந்த படத்தை பார்த்த பிறகு சில ஒற்றுமைகள் ஒரு தமிழ் படத்திலே தெரிஞ்சது அது ‘சூர்யா’ இல்லை இல்லை வெங்கட் பிரபு வோட ‘மாஸ்’ படம் தான்.தமிழ்லே சொதப்பி இருந்தாங்க.நல்ல நடிகர்களை வேஸ்ட் செஞ்சாச்சி,நேரத்தை வீண் செஞ்சாச்சி மொத்ததிலே காசு போச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக